×

காலி மதுபாட்டிலுக்கு ரூ. 10 தரக்கோரி தகராறு: போளூரில் டாஸ்மாக் ஊழியர் மீது தாக்குதல்

தி.மலை: திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் டாஸ்மாக் கடை ஊழியர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போளூரில் உள்ள டாஸ்மாக் கடையில் காலி பாட்டிலுக்கு ரூ.10 திரும்பத் தரக்கோரி போதையில் வந்தவர் தகராறு செய்துள்ளார். வேறு கடையில் வாங்கிய பாட்டிலை கொண்டு வந்ததால், பணம் தர டாஸ்மாக் ஊழியர் மறுத்துள்ளார். காலி பாட்டிலுக்கு ரூ.10 திரும்பத் தராததால் போதை ஆசாமி காலி பாட்டிலால் ஊழியர் தலையில் அடித்துள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த ஊழியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஊழியர் மீது தாக்குதல் நடத்தியதால் போளூரில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மாலை 6 மணிக்கே மூடப்பட்டுள்ளது. டாஸ்மாக் ஊழியர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Tasmak ,Bolur ,Bolur, Tiruvannamalai district ,
× RELATED மேட்டூர் அணையை திறக்காமல் குறுவை...