வாஷிங்டன்: ஈரானுடன் உடன்பாடு கையெழுத்தாவது உறுதியானதாக டிரம்ப் அறிவித்ததை அடுத்து கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த சில நாட்களாக போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டிவருகிறது. கடந்த 3 நாட்களாக ஈரான் மீது அமெரிக்க படைகள் கடுமையான தாக்குதல்களை நடத்தி வந்தன. இந்த நிலையில், ஈரான் மீதான அடுத்தகட்ட தாக்குதல்களை அமெரிக்கா நிறுத்தி வைப்பதாக டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் அறிவித்தார். அமெரிக்கா முன்வைத்த 15 அம்ச அமைதி திட்டத்திற்கு ஈரான் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இதில் ஒரு மாத கால போர் நிறுத்தம், யுரேனியம் செறிவூட்டலை தடை செய்தல் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்தல் ஆகிய முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இதற்கு பிரதிபலனாக ஈரான் மீதான பொருளாதார தடைகளை நீக்கவும், சிவில் அணுசக்தி மேம்பாட்டிற்கு உதவி வழங்கவும் அமெரிக்கா சம்மதம் தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் இஸ்ரேல், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், துருக்கி, பாகிஸ்தான், எகிப்து உள்ளிட்ட 11 நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட சம்மதம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரான் உடனான போரை முடிவுக்கு கொண்டு வர சிறந்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாகவும், அதற்கான ஆவணங்கள் இறுதி கட்டத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார். ஈரானுடன் உடன்பாடு கையெழுத்தாவது உறுதியானதாக டிரம்ப் அறிவித்ததை அடுத்து கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது. ஈரானுடன் உடன்பாடு கையெழுத்தாவது உறுதியானதாக டிரம்ப் அறிவித்ததை அடுத்து கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, தரத்தைப் பொறுத்து பீப்பாய் ஒன்றுக்கு 2.8% முதல் 6% வரை வீழ்ச்சி அடைந்துள்ளது.
டபுள்யூடிஐ எனப்படும் அமெரிக்கா கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் விலை 3% குறைந்து 84.99 டாலருக்கு சரிந்தது. பிரென்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 2.8% குறைந்து 87.85 டாலரானது. மர்பான் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 6% சரிந்து 81.98 டாலருக்கு விற்பனையாகிறது.
