×

செங்கிப்பட்டி அருகே வாகன சோதனையில் ரூ.1.80 லட்சம் சிக்கியது

திருக்காட்டுப்பள்ளி, மார்ச் 7: தமிழகத்தில் சட்ட மன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அறிவிக்கப்பட்டு அமலில் உள்ளது. மாநிலம் முழுவதும் பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டு தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று (6ம் தேதி) மாலை திருவையாறு சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட கந்தர்வகோட்டை - செங்கிப்பட்டி சாலையில் டிபி சானிடோரியம் எதிரில் தேர்தல் பறக்கும்படை நிலை கண்காணிப்புக்குழு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தது. அப்போது கந்தர்வகோட்டையிலிருந்து செங்கிப்பட்டி நோக்கி வந்த 12 டயர் லாரியை நிறுத்தி சோதனையிட்டனர்.

அதில் ஓட்டுநர் இருக்கையின் பின்புறம் இருந்த படுக்கையில் ரூ.80 ஆயிரம் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பணம் குறித்து எந்த ஆவணம் இல்லாததால் அப்பணத்தை பறிமுதல் செய்து அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. திருவையாறு: திருத்துறைப்பூண்டி அகமுடையார் தெருவை சேர்ந்த ஜீவா என்பவர் காரில் சென்னை சென்று விட்டு நேற்று மாலை திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது திருவையாறு-தஞ்சை சாலையில் நடுக்கடை என்ற இடத்தில் சோதனையில் ஈடுபட்டிருந்த பறக்கும் படை துணை தாசில்தார் செல்வராணி தலைமையிலான குழுவினர் நடத்திய சோதனையில் காரில் உரிய ஆவணமின்றி ரூ.1 லட்சம் இருந்ததை பறிமுதல் செய்தனர். பின்னர் தேர்தல் நடத்தும் துணை அலுவலர் நெடுஞ்செழியனிடம் ஒப்படைத்தனர்.

Tags : Sengipatti ,
× RELATED நாடாளுமன்ற தேர்தல் எதிரொலி...