- இந்நிறுவனத்திற்கு
- ரயில்வே அமைச்சர்
- அஸ்வினி வைஷ்ணவ்
- ஜெய்ப்பூர்
- யூனியன் ரயில்
- அமைச்சர்
- அஸ்வினி வைஷ்ணவ்
- மால்வியா தேசிய தொழில்நுட்ப
- மின்னிட்
ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூரில் உள்ள மால்வியா தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (MNIT) மாணவர்களுடன் சமீபத்தில் ஒன்றிய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கலந்துரையாடல் மேற்கொண்டார். அப்போது பேசிய மாணவர்கள் தயவுசெய்து IRCTC கேப்ட்சா (captcha) தொடர்பான சிக்கலைத் தீர்த்து வையுங்கள் என்று கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து அவர்களிடம் பேசிய மத்திய அமைச்சர், வரும் ஜூலை 15-க்குள் புதிய IRCTC வெப்சைட் உருவாக்கப்படும் என்று அறிவித்தார்.
கேப்ட்சா சிக்கல் தவிர யூஸர்கள் அடிக்கடி எதிர்கொள்ளும் பிற பிரச்சனைகளில் அதிக வெப் ட்ராஃபிக் உள்ள நேரங்களில் வெப்சைட் மெதுவாக இயங்குதல், முடங்குதல் மற்றும் செயலிழத்தல், செஷன் திடீரென முடிவடைதல் மற்றும் எதிர்பாராத விதமாக லாக்அவுட் ஆவது, சீட்டை தேர்ந்தெடுத்த பிறகு கட்டணம் செலுத்துவதில் ஏற்படும் சிக்கல், லாகின் சிக்கல்கள் மற்றும் OTP தொடர்பான சிக்கல்கள்; தட்கல் முன்பதிவின் போது ஏற்படும் அதிக ட்ராஃபிக் உள்ளிட்ட பல இருப்பதாக மாணவர்கள் அமைச்சரிடம் முறையிட்டனர்.
இவ்வாறு பல குறைபாடுகளை மாணவர்கள் சுட்டிக்காட்டியதை தொடர்ந்து அதிலும் குறிப்பாக இணையதள குறைபாடுகள் குறித்து மாணவர்கள் சுட்டிக்காட்டியவுடன், அமைச்சர் வைஷ்ணவ் அங்கிருந்தபடியே உயர் ரயில்வே அதிகாரியைத் தொடர்பு கொண்டு 30 நாட்களுக்குள் புதிய இணையதளத்தைக் கொண்டுவர முடியுமா என்று கேட்டார். அவரும் முடியும், செய்யலாம் என்று பதிலளித்ததை தொடர்ந்து ஜூலை 15-க்குள் முற்றிலும் மேம்படுத்தப்பட்ட புதிய IRCTC வெப்சைட் பயன்பாட்டுக்கு வரும் என்று மாணவர்களிடம் உறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது.
