×

4 பேரிடம் விசாரணை ஜெயங்கொண்டம் நகராட்சி சார்பில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி

ஜெயங்கொண்டம், மார்ச்7: அரியலூர் மாவட்ட கலெக்டர் மற்றும் தஞ்சை நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி அனைவரும் வாக்களிப்பதன் அவசியம் குறித்த தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு ஆணையர் (பொ) சிவராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய விளம்பர பதாகைகளை ஏந்தியும், பிளக்ஸ் பேனர் விளம்பரங்கள் பிடித்தபடியும் வாகன ஒலிபெருக்கி அறிவிப்பின் வழியாகவும் பொதுமக்களுக்கு 100 சதவீத வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர். விழிப்புணர்வு பேரணியானது நகராட்சி அலுவலகத்தில் தொடங்கி விருத்தாச்சலம் சாலை, கடைவீதி வழியாக சென்றுஅண்ணா சிலை வரை சென்று முடிவடைந்தது. பேரணியில் பணி மேற்பார்வையாளர் ராமகிருஷ்ணன் மற்றும் நகராட்சி அலுவலக ஊழியர்கள், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் உள்ளிட்ட 200 நபர்கள் இப்பேரணியில் கலந்து கொண்டனர்.

Tags : Jayangondam Municipality ,
× RELATED ஜெயங்கொண்டத்தில் ரூ.91 லட்சத்தில் கிளை நூலகம்அமைக்க அளவீடு பணி