×

முதல்ல உங்க கட்சில இருக்கும் “காமக்கொடூரர்களை” கன்ட்ரோல் பண்ணுங்க முதல்வரே… Zero tolerance-னு சொல்ல உங்களுக்கு வாய்கூசல..!!

சென்னை: கணவனை இழந்த பெண் ஒருவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து ஆலந்தூர் வடக்கு பகுதி தவெக செயலாளர் பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சியளிப்பதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பான அறிக்கையில், “Zero tolerance-ஆ? இல்லை, Zero Control-ஆ முதல்வரே” என்று தலைப்பிட்டு ஒருபுறம் ஆளுங்கட்சி திமிரில், பெண்கள் பாதுகாப்பை தவெகவினர் காவு வாங்கி வருகின்றனர். மறுபுறம், அதிகார மமதையில், ஸ்ரீவைகுண்டம் தவெக எம்.எல்.ஏ சரவணன் போன்றோர் பாதிக்கப்பட்ட பெண்களிடம் பேரம் பேசுகின்றனர். இப்படி ஒட்டுமொத்தமாக பெண்கள் பாதுகாப்பை சீரழிக்கும் கும்பலை கைகுள்ளேயே வைத்துக்கொண்டு, பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எப்பொழுதும் “zero tolerance”-ஐ உறுதி செய்வோம் என்று கூற தங்களுக்கு வாய்கூசவில்லையா? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

முதலில் தங்கள் கட்சிக்குள் இருக்கும் காமக்கொடூரர்களை கட்டுக்குள் கொண்டுவந்து மகளிரின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்! அதற்குப் பின்பு “தூய சக்தி” என்று மார் தட்டுங்கள் முதல்வர் விஜய் அவர்களே என்று கடுமையாக விமர்சித்து உள்ளார்.

Tags : Chennai ,BJP ,President ,Nayinar Nagendran ,Alandur ,
× RELATED நேற்று நீங்க வாசிச்ச சாதனை பட்டியல்...