தா.பழூரில் வாக்களிப்பது குறித்து மாதிரி இயந்திரத்தில் செயல்விளக்கம்

தா.பழூர், மார்ச்7: அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்தில் மாதிரி வாக்கு இயந்திரம் மூலம் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தா.பழூர் கிராம நிர்வாக அலுவலகம் அருகே சாலை ஓரம் மாதிரி வாக்கு இயந்திரம் அமைக்கப்பட்டு வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும். அச்சமின்றி வாக்களிக்க வேண்டும், எவ்வாறு வாக்களிப்பது என்பது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர் பகவதி ராஜ், கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார், கிராம நிர்வாக உதவியாளர் கோபி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் அப்பகுதியை சேர்ந்த வாக்காளர்கள் சந்தேகங்களுக்கு பதில் அளித்தனர். மேலும், வாக்காளர்கள் மாதிரி வாக்கு இயந்திரத்தில் எப்படி வாக்களிப்பது என வாக்களித்து தெரிந்து கொண்டனர்.

Related Stories:

More
>