×

2 பேர் காயம் கொண்டை கடலை பறிக்கும் பணியில் பெண்கள் புதுப்பிக்க மக்கள் கோரிக்கை விசி நிர்வாக குழு கூட்டம்

கரூர், மார்ச். 7: கரூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. இதில், பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கரூரில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் ஜெயராமன் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் ராமச்சந்திரன் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் அகரமுத்து உட்பட அனைத்து நிர்வாகிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகளை ஒதுக்கிய திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்வது. மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் கரூர் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றி பெற கடுமையாக உழைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : VC ,
× RELATED தொகுதிப் பங்கீடு குறித்து திமுக –...