காவிரியில் முகாமிட்ட வெளிநாட்டு பறவைகள் மாநில கூடைபந்து போட்டியில் பங்கேற்க அரசு கல்லூரி மாணவிகள் 3 பேர் தேர்வு

கரூர், மார்ச். 7: சென்னையில் நடைபெறவுள்ள மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் கலந்து கொண்டு விளையாட கரூர் அரசுக் கல்லூரியில் பயிலும் மாணவிகள் 3 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சென்னை நேரு ஸ்டேடியத்தில் முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் கரூர் மாவட்டம் சார்பில் கலந்து கொள்ள கரூர் அரசுக் கலைக் கல்லூரியில் வணிகவியல் பயிலும் மாணவிகள் ஜெனோ, சர்மிளா, மோனிஷா ஆகிய மூவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வான மாணவிகளை கல்லூரி முதல்வர் கவுசல்யாதேவி, உடற்கல்வி இயக்குநர் ராஜேந்திரன் உட்பட அனைத்து பேராசிரியர்களும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories: