பட்டிவீரன்பட்டி அருகே தமிழக அரசைக் கண்டித்து வீடுகளில் கருப்புக்கொடி

பட்டிவீரன்பட்டி, மார்ச் 7: பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள நெல்லூர், நெல்லூர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் தமிழக அரசைக் கண்டித்து கிராம மக்கள் கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சமீபத்தில் தமிழக அரசு வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை அறிவித்தது. இதற்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில்   நெல்லூர், நெல்லூர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் தமிழக  அரசைக் கண்டித்து கிராம மக்கள் கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில்  ஈடுபட்டனர். இதுகுறித்து நெல்லூரைச் சேர்ந்த சீர்மரபினர் நலச்சங்க ஒன்றிய செயலாளர் வடிவேல் கூறுகையில், முறையாக மக்கள்தொகை கணக்கெடுப்பு எடுக்காமல், தங்கள் ஓட்டு அரசியலுக்காக தமிழக அரசு எம்பிசி இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு செய்து சட்டமசோதாவை அவசரமாக இயற்றியுள்ளது. இதனைக் கண்டித்தும், தமிழக அரசு நிறைவேற்றிய சட்டமசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தியும், எங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் வீடுகளில் கருப்புக்கொடிகளை கட்டியுள்ளோம் என்று தெரிவித்தார்.

Related Stories:

>