கன்னிவாடி நல மையத்தில் 565 பேருக்கு கொரோனா தடுப்பூசி

சின்னாளபட்டி, மார்ச் 7: கன்னிவாடி அரசு சமுதாய நல மையத்தில் 565 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கன்னிவாடி அரசு சமுதாய நல மையத்தில் கடந்த ஒரு வார காலமாக கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக மருத்துவத்துறை பணியாளர்களுக்கு போடப்பட்ட பின்பு கன்னிவாடி பகுதிக்கு உட்பட்ட காவல்துறை அதிகாரிகள், பேரூராட்சி பணியாளர்கள், ஆசிரியர்கள், பொது மக்கள் உட்பட பலருக்கு நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் 165 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் கன்னிவாடி பேரூராட்சி செயல் அலுவலர் ஓ.பாண்டீஸ்வரி, ஸ்ரீராமபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் ஆகியோர் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டனர். பயனாளிகள் விரைந்து வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வண்ணம் மருத்துவமனையில் தனியறை ஒதுக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>