×

மோடி கூட்டத்தை மீண்டும் புறக்கணித்த புதுவை முதல்வர்

புதுச்சேரி: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்து 12 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையில் டெல்லி பாரத் மண்டபத்தில் என்டிஏ கட்சிகளின் கூட்டம் நேற்று நடந்தது. இதில் பிரதமர் மோடி, என்டிஏ கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள், மாநில முதல்வர்கள் மற்றும் பாஜ உயர் மட்டத் தலைவர்களும் பங்கேற்றனர்.

புதுச்சேரியில் என்டிஏ கூட்டணி 2வது முறையாக ஆட்சியை அமைத்து உள்ள நிலையிலும், முதல்வர் ரங்கசாமி இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. மேலும் பிரதமர் மோடி தலைமையில் இன்று டெல்லியில் நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்தை முதல்வர் ரங்கசாமி புறக்கணித்து உள்ளார். நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமி கடந்த பல ஆண்டுகளாக பங்கேற்பதில்லை. என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Puducherry ,Chief Minister ,Modi ,NDA ,Bharat Mandapam ,Delhi ,National Democratic Alliance government ,
× RELATED திட்டமிட்டு அலைக்கழிக்கும்...