×

வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதி உள்ளதா? தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆய்வு

தேனி, மார்ச் 7:  தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.  தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு ஏப்.6ம் தேதி நடக்க உள்ளது. தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, பெரியகுளம்(தனி), போடி, கம்பம் ஆகிய நான்கு சட்டமன்றத்  தொகுதிகள் உள்ளன. நான்கு சட்டமன்றத் தொகுதிகளிலும்  1561 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதியில் மொத்தமுள்ள 388 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. பெரியகுளம்(தனி) சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 398  வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன.

போடி சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 383 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. கம்பம் சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 392 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. வாக்குப்பதிவின்போது, வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் உள்ளதா என தேர்தல் ஆணையம் கண்காணித்து வருகிறது. இதில், தேனி மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் கழிப்பறை, குடிநீர் வசதி, மின்சார வசதி உள்ளதா, மாற்றுத்திறனாளிகள் நடந்து செல்ல உரிய சாய்தள பாதை உள்ளதா என ஆய்வு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Election Commission ,
× RELATED வாக்குச்சாவடி மையத்தின் அருகில்...