×

மேகமலை வன விவசாயிகளுக்கு ஆதரவாக கலெக்டரிடம் கோரிக்கை மனு


தேனி, மார்ச் 7: மேகமலை வன விவசாயிகள் பயன்படுத்தி வந்த ஆயில் மோட்டார் மற்றும் குழாய்களை கையகப்படுத்தும் வனத்துறை நடவடிக்கையை நிறுத்திவைக்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தேனி மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமையில் விவசாயிகள் நேற்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இம்மனுவில் கூறியிருப்பதாவது: மேகமலை, தும்மக்குண்டு, வருசநாடு, முறுக்கோடை ஊராட்சிகளில் 100 வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்து வரும் வன விவசாயிகளை வனத்துறை ஆக்கிரமிப்பாளர்கள் எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றக்கிளையில் 2018ம் ஆண்டு வழக்கு நடந்தது.

இதில் ஒருதரப்பான தீர்ப்பினை எதிர்த்து வன விவசாயிகள் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு 2019 தாக்கல் செய்யப்பட்டு வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணை வருகிற 12ம் தேதி நடக்க உள்ளது.
இந்நிலையில், வனத்துறை மற்றும் போலீசார் வன விவசாயிகள் விவசாயம் செய்து வரும் பகுதிக்குள் சென்று,விவசாயத்திற்கு பயன்படுத்தும் ஆயில்மோட்டார்கள், குழாய்களை சேதப்படுத்தியும், கையகப்படுத்தியும் சென்றுள்ளனர். இதனால் அரசரடி, பொம்முராஜபுரம், இந்திராநகர் விவசாயிகள் மத்தியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே, கலெக்டர் தலையிட்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு வரும்வரை விவசாயிகளை தொந்தரவு செய்யாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தி இருந்தனர்.

Tags : Meghamalai Forest Farmers ,
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...