கமுதி அருகே வாலிபரிடம் பணம் செல்போன் பறிப்பு

கமுதி, மார்ச் 7: கமுதி அருகே நீராவி கிராமத்தை சேர்ந்தவர் குருசாமி (28). சம்பவத்தன்று இவர் அப்பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளி அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு டூவீலரில் வந்த 4 பேர் குருசாமியுடன் ஆயுதத்தை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.7 ஆயிரத்து 500 பணம், ஒரு செல்போனை பறித்து சென்றனர். இதுகுறித்து குருசாமி கமுதி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து 4 பேரையும் தேடி வருகின்றனர்.

Related Stories: