×

கீழக்கரையில் பள்ளிவாசல் திறப்பு விழா

கீழக்கரை, மார்ச் 7: கீழக்கரை தெற்கு தெரு ஜமாத் மஸ்ஜித் பரிபால கமிட்டியின் ஜும்மா பள்ளிவாசல் திறப்பு விழா நடந்தது. ஜமாத் தலைவர் உமர் அப்துல் காதர் தலைமை வகிக்க, துணை தலைவர் பௌசுல் அலியுர் ரஹ்மான், செயலாளர் சயீது இப்ராகிம் முன்னிலை வகித்தனர். யூசுப் சாஹிப் ஆலிம் கிராத் ஓதி துவக்கி வைத்தார். தொடர்ந்து உலக நன்மை, உலக அமைதி வேண்டியும் பள்ளி ஆலிம் தமிமுன் அன்சாரி பிரார்த்தனை செய்தார். சிறப்பு விருந்தினர்களாக அனைத்து ஜமாத் கூட்டமைப்பு செயலாளர் சேக் உசேன், என்ஜினியர் சுல்தான் சம்சுல் கபீர் கலந்து கொண்டனர். திமுக நகர இளைஞரணி அமைப்பாளர் ஹமீது சுல்தான், ஓஇசி க்ரூப் ஆப் கம்பெனி கீழக்கரை, எம்கேஎம் செய்யது மீரா பீவி ட்ரஸ்ட், கீழக்கரை செய்யது அப்துல்லா சாகிப் ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்தனர். இதில் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பு தொழுகை நடத்தினர்.

Tags : Lower Mosque ,
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...