×

முத்துப்பேட்டை கடைத்தெருவில் விளம்பர பலகை அகற்றி பொருட்களை பறிமுதல் செய்த காவல்துறையினரால் பரபரப்பு

 

திருவாரூர்: முத்துப்பேட்டை கடைத்தெருவில் இன்று டிஎஸ்பி ராஜூ தலைமையில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமாரன், சப்.இன்ஸ்பெக்டர் ராகுல் தலைமையில் போலீசார் பழைய பேரூந்து நிலையம் மற்றும் திருத்துறைப்பூண்டி சாலை பகுதியில் பேரூராட்சி பணியாளர்களை வைத்துக்கொண்டு திடீரென்று கடைகளுக்கு முன்பாக உள்ள விளம்பரப் பலகைகளை அதிரடியாக அகற்றி பேரூராட்சி டிராக்டர்களில் ஏற்றி சென்றனர். மேலும் கடைகளுக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த பொருட்களையும் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர். மேலும் கடை முன்பாக இருந்த விளம்பர பலகைகளை போலீசார் சேதப்படுத்தினர்.

மேலும் பொருட்களை எடுத்து வீசினர். இதனால் வியாபாரிகளுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற முத்துப்பேட்டை வர்த்தகக்கழக தலைவர் நைனா முகமது தலைமையில் நிர்வாகிகள் ஒன்று கூடி டிஎஸ்பி ராஜூவை நேரில் சந்தித்து ‘தாங்கள் முன்கூட்டியே சொல்லியிருந்தால் நாங்களே அகற்றி இருப்போம் திடீர் என்று வந்து இதுபோல அதிரடி பணி செய்வது நியாயம் இல்லை. தற்போது பணியை நிறுத்துங்கள் கால அவகாசம் கொடுங்கள்’ என்று முறையிட்டனர்.

இதனையடுத்து டிஎஸ்பி ராஜூ ‘இன்றும் நாளையும் இரு நாள் அவகாசம் தருகிறோம் அதற்குள் அகற்றிக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் நாளை மறுதினம் நாங்களே அகற்றுவோம்’ என்று கூறினார். அதனை தொடர்ந்து அந்த பணி கைவிடப்பட்டு போலீசார் திரும்பி சென்றனர். மேலும் வியாபாரிகளிடம் பறிமுதல் செய்த சில பொருட்களை மற்றும் திரும்ப வழங்கினர். இதனால் முத்துப்பேட்டையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Muthuppet store ,Inspector ,Muthukmaran, Sub ,DSP ,Raju ,Muthuppettai ,Rahul ,Druthrapundi ,
× RELATED “உங்கள் ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கு...