நெல்லை மாநகர போக்குவரத்து போலீசாருக்கு குளிர்பானங்கள் வழங்கல்

கேடிசி நகர், மார்ச் 7: கோடைகாலத்தையொட்டி போக்குவரத்து காவலர்களுக்கு மாநகர போலீஸ் துணை கமிஷனர் மகேஷ்குமார் குளிர்பானம் வழங்கினார். கோடை காலத்தையொட்டி போக்குவரத்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு மோர், குளிர்பானங்கள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி நெல்லையில் போக்குவரத்து காவலர்களுக்கு மாநகர போலீஸ் கமிஷனர் அன்பு உத்தரவின் பேரில் குளிர்பானம் வழங்கும் பணி நேற்று துவங்கியது. நெல்லை சந்திப்பு அண்ணா சிலை முன் நடந்த இந்நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த மாநகர குற்றம் மற்றும் போக்குவரத்து துணை கமிஷனர் மகேஷ்குமார், போக்குவரத்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு  குளிர்பானம் வழங்கி, இப்பணியைத் துவக்கிவைத்தார்.

 இதில் போக்குவரத்து ஆய்வாளர் மகேஸ்வரி மற்றும் அதிகாரிகள், போலீசார் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related Stories:

>