×

மண்டைக்காடு திருவிழாவையொட்டி டாஸ்மாக் கடைகள் 3 நாட்கள் மூடல்

நாகர்கோவில், மார்ச் 7: குமரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி திருவிழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு மார்ச் 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் 2003ன் பிரிவு 12(2)ன்படி மாவட்ட கலெக்டருக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தின்படி சட்டம் மற்றும் ஒழுங்கினை பராமரிக்க மண்டைக்காடு பகுதியை சுற்றியுள்ள குளச்சல் அண்ணாசிலை சமீபம், இரும்பிலி, குளச்சல் டிபி ஜங்ஷன், இரும்பிலி-ரீத்தாபுரம், திங்கள்சந்தை ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள், மணவாளக்குறிச்சி, திங்கள்சந்தை பகுதியில் உள்ள பார்கள் ஆகியன மூடப்பட உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Tasmag ,Mandakkadu festival ,
× RELATED பொது விடுமுறை நாட்களில்...