திமுக அவசர செயற்குழு கூட்டம்

தேன்கனிக்கோட்டை, மார்ச் 7: தேன்கனிக்கோட்டையில் திமுக அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ் தலைமை வகித்தார். துணை செயலாளர்கள் சீனிவாசன், தனலட்சுமி, பொருளாளர் ஜெயராமன், மாநில சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் விஜயகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமார், பொதுக்குழு உறுப்பினர்கள் முனிராமைய்யா, சின்னசாமி முன்னிலை வகித்தனர். மேற்கு மாவட்ட செயலாளர் தளி பிரகாஷ் எம்எல்ஏ, மாவட்ட துணை செயலாளர் முருகன் எம்எல்ஏ, ஓசூர் மாநகர பொறுப்பாளர் சத்யா எம்எல்ஏ ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், திருச்சியில் இன்று நடைபெறும் திமுக பொதுக்கூட்டத்தில் கட்சியினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும். தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ளதால் திமுகவினர் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிக்க வேண்டும். 3 தொகுதிகளிலும், 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என பேசினர். கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் சீனிவாசலுரெட்டி, திவாகர், நாகன், கணேசன், சின்னபில்லப்பா, வெங்கடேஷ், ரகுநாத், நாகேஷ், பேரூர் செயலாளர்கள் சீனிவாசன், கருணாநிதி, மாவட்ட துணை சேர்மன் ஷேக்ரஷீத், அணிகளின் அமைப்பாளர்கள் சீனிவாசன், சின்னராஜ், எல்லோராமணி, கோபி, ராஜா, பாக்கியராஜ், சீதர், ரவீந்திரநாத், ஞானசேகர், முனிரத்தினா, அவைத்தலைவர்கள் வெங்கடசாமி, நாகராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>