மயானக்கொள்ளை திருவிழா

தர்மபுரி, மார்ச் 7: தர்மபுரி டவுன் வெளிப்பேட்டைத் தெரு அங்காளம்மன் கோயில் மகா சிவராத்திரி மயான கொள்ளை விழா, கடந்த 5ம் தேதி இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 7 மணிக்கு அங்காளம்மன் புலிவாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா நடந்தது. இன்று (7ம்தேதி) அக்னி மாரியம்மன் அலங்காரத்தில் திருவீதி உலா, 8ம் தேதி காமதேனு வாகனத்தில் பிரம்மமுகி அலங்காரத்திலும் அம்மன் திருவீதி உலா நடக்கிறது. 12ம் தேதி மதியம் 1.30 மணிக்குள் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. 3ம் தேதி காலை 11.30 அம்மன் பூத வாகனத்தில் மயானம் செல்லும் வைபவம் நடக்கிறது.  17ம் தேதி புதன்கிழமை இரவு 7 மணிக்கு மேல் கொடி இறக்குதல் மற்றும் கும்பபூஜை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். குமாரசாமிபேட்டை அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில், மயான கொள்ளை விழா நாளை மறுநாள்(9ம்தேதி) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 10ம் தேதி காலை பூமிதி திருவிழாவும், 11ம் தேதி பொங்கல் வைத்தல், 12ம் தேதி காலை பால்குடம் எடுத்தல், இரவு திருக்கல்யாணம் நடக்கிறது. 13ம் தேதி பகல் 11.30 மணிக்கு மயான கொள்ளை திருவிழா நடக்கிறது. 14ம் தேதி பல்லக்கு உற்சவம், 15ம் தேதி பிள்ளைபாவு மற்றும் கும்பபூஜை, கொடியிறக்கம் நடக்கிறது.

Related Stories:

>