×

தலைநகர் டெல்லியில் ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் சங்கமம்: ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக ஆலோசனை

 

புதுடெல்லி: ஒன்றிய பாஜக அரசை வீழ்த்தும் நோக்கில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து டெல்லியில் இன்று முக்கிய ஆலோசனையை மேற்கொண்டனர். டெல்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் இந்தியா கூட்டணியின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி, மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் 23 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டதாக மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்தார். ஒன்றிய பாஜக அரசுக்கு எதிரான பல்வேறு விசயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் டி.ராஜா, ‘கூட்டணிக்குள் பரஸ்பர மரியாதையும் நம்பிக்கையும் மிக அவசியம்; அப்படி இல்லாத பட்சத்தில் ஒருங்கிணைந்த போராட்டத்தை முன்னெடுக்க முடியாது’ என்று தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் நேரில் பங்கேற்றனர். சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே காணொலி வாயிலாக கலந்து கொண்டார். தமிழகத்தில் விஜய் தலைமையிலான தவெக உடன் காங்கிரஸ் கைகோர்த்ததால், இந்தியா கூட்டணியின் முக்கிய கட்சியான திமுக கூட்டணியில் இருந்து விலகிய நிகழ்வு பெரும் அரசியல் மாற்றமாக கருதப்படுகிறது.

Tags : India' Coalition Leaders Association ,Delhi ,Union BJP ,New Delhi ,India Alliance ,Constitution Club ,Congress ,President ,Mallikarjuna Karke ,
× RELATED பிரக்ஞானந்தாவுக்கு ஊக்கத்தொகையாக ரூ.50...