திருவையாறு தாலுகா அலுவலகத்தில் மின்னணு வாக்கு இயந்திரத்தில் வாக்குப்பதிவு செயல் விளக்கம் தேர்தல் நடத்தும் அலுவலர் துவக்கி வைத்தார்

திருவையாறு,மார்ச் 6: திருவையாறு தாலுகா அலுவலகத்தில் மின்னணு வாக்கு இயந்திரம் செயல் விளக்கத்தை தேர்தல் நடத்தும் அலுவலர் மஞ்சுளா துவக்கி வைத்தார். திருவையாறு தாலுகா அலுவலகத்தில் உள்ள மக்கள் சேவை மையத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் மின்னணு வாக்கு இயந்திரத்தில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும். நாம் அளித்த வாக்கு சரியாக பதிவாகி உள்ளதா என்பதையும் சரிபார்க்கும் முறையையும் செயல் விளக்கத்துடன் திருவையாறு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலருமான மஞ்சுளா பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மின்னணு வாக்கு எண்ணும் இயந்திரத்தை தொடங்கி வைத்தார். திருவையாறு தாலுகா அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் தங்கள் சந்தேகங்களை மக்கள் சேவை மையத்தில் உள்ள மின்னணு வாக்கு இயந்திரத்தில் எவ்வாறு வாக்களிப்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.

நிகழ்ச்சியில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், தாசில்தாருமான நெடுஞ்செழியன், தேர்தல் துணை தாசில்தார் விவேகானந்தன், தலைமையிடத்து துணை தாசில்தார் வெங்கட்ராமன் வருவாய் ஆய்வாளர் சாந்தி ஆகியோர் உடனிருந்தனர்.

30 ஆண்டுகளுக்கு மேலாக பரம்பரை பரம்பரையாக பல்வேறு ஊர்களுக்கு சென்று இந்த தொழிலை செய்து வருகிறோம். பசு மாடுகளை எவ்வாறு கண்காணிப்போமோ, அதேபோல குளிப்பாட்டி சுத்தம் செய்து ஆரோக்கியமாக வைத்துள்ளோம். கால்நடை மருத்துவரிடம் காட்டி கழுதைக்கு நோய்தொற்று ஏற்படாமல் பார்த்து கொள்கிறோம் என்று கழுதை பால் வியாபாரி கூறினார்.

Related Stories:

More