×

அரியமான் கடற்கரையில் படகு சவாரி இயக்குவது குறித்து ஆலோசனை

மண்டபம், ஜூன் 8: மண்டபம் ஒன்றியம் சாத்தக்கொண் வலசை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அரியமான் அமைந்துள்ளது. தென்கடலோரப் பகுதியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பீச் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு பல கோடி ரூபாய் மதிப்பில் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை பார்வையிடுவதற்காக தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் ராஜீவ் மற்றும் கலெக்டர் சிவகுரு பிரபாகரன், கூடுதல் ஆட்சியர் திவ்யான்ஷீநிகம் ஆகியோர் வருகை தந்தனர். அங்கு மூங்கில் மரங்களால் தயாரிக்கப்பட்டு வரும் சுற்றுலாப் பயணிகள் ஓய்வு கூடாரம் மற்றும் உடை மாற்றும் அறைகள் உள்பட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தனர். அதன் பின்னர் கடலோரப் பகுதியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் படகு சவாரி இயக்குவது குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.

Tags : Ariyaman Beach ,Mandapam ,Ariyaman ,Union ,Sathakon ,Valasai Panchayat ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...