செந்துறையில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டம்

அரியலூர்,மார்ச்.6: செந்துறையில், பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் பெரம்பலூர், குன்னம் தொகுதி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில், நீட் எதிர்ப்பு போராளி குழுமூர் அனிதாவின் 21வது பிறந்த நாளை முன்னிட்டு செந்துறை பேருந்து நிலையதிலிலுள்ள தந்தை பெரியார் சிலை, அரசு மருத்துவமனை சாலையிலுள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து பகுஜன் சமாஜ்வாதி கட்சி சார்பில் அனிதாவின் மூன்றாவது சகோதரர் பாண்டியன் குன்னம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராகவும், ராஜேந்திரன் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராகவும் அக்கட்சியின் மாநில செயலாளர் காமராஜ் அறிமுகம் செய்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட அவைத்தலைவர் ஆனந்தன், அரியலூர் மாவட்ட தலைவர் சின்னதுரை உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

More