×

பல்வேறு துறை அலுவலகங்களை தேடும் பொதுமக்களுக்காக சமுதாய உதவி மையம் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் துவக்கம்

பெரம்பலூர்,மார்ச் 6: பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு துறைகளின் அலுவலகங்களை தேடிஅலைபவர்களுக்காக சமூக நலத்துறை சார்பாக, சமுதாய உதவி மையம் திறக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு தினமும் பல்வேறு பணிகளுக்காகவும், கோரிக்கைகளுக்காகவும் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இவர்களில் பலருக்கு எந்தத்துறை அலுவலகம் எந்த தளத்தில் இயங்கி வருகிறது, எந்த கோரிக்கைக்காக எந்த அலுவலகங்களை நாட வேண்டும் போன்ற விவரங்கள் தெரியாததால் அடுக்குமாடி கட்டிடத்தின் 3 தளங்களுக்கும் முச்சு வாங்கி வாங்கி படிகளில் ஏறி, பலர் பல மணி நேரம் அல்லாடும் நிலை உள்ளது.

தரைத் தளத்தின் மேற்கு பகுதியில் 3 தளங்களுக்கான துறை வாரியான அலுவலகங்கள் இயங்கும் பட்டியல் அடங்கிய பிரமாண்ட பெயர்ப் பலகையில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. இருந்தும் எந்த நோக்கத்திற்காக எந்த அலுவலகத்தை நாட வேண்டும் எனத் தெரி யாமல் திண்டாடும் பலருக்காக பெரம்பலூர் மாவட்ட சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை சார்பாக தற்போது சமுதாய உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவலர் தமீமுனிஷா ஏற்பாட்டில் பிரத்தியேகமாக ஒரு அலுவலர் நியமிக்கப்பட்டு, தரைத் தளத்தில் மனுக்கள் பதிவு செய்யும் அரங்கை ஒட்டி இந்த சமுதாய உதவி மையம் செயல்படும் விதமாக ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது.

 இதில் பணியிலுள்ள பெண், கலெக்டர் அலுவலகத்திற்கு உள்ளே வந்து சில துறை அலுவலகங்களின் இடம் தெரியாமல் அல்லாடும் நபர்களுக்கு உதவுவதற்காக இந்த மையம் தொடங்கப்பட் டுள்ளது. இதற்கு பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.

Tags : Perramblur Collector Office ,Community Assistance Centre ,
× RELATED துபாய் வெள்ளத்தில் மகன் உயிரிழந்த...