×

தில்லையாடி வழியாக செல்லும் நாகை- சிதம்பரம் பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும்

தரங்கம்பாடி, மார்ச் 6: கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது நிறுத்தப்பட்ட தில்லையாடி வழியாக நாகை மற்றும் சிதம்பரம் செல்லும் அரசு பேருந்தை மீண்டும் இயக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகையில் இருந்து தில்லையாடி வழியாக சிதம்பரத்துக்கு ஒரு அரசு பேருந்து தினம்தோறும் 3 முறை சென்று வந்தது. கொரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு இந்த பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. ஆனால் கொரோனா தொற்று குறைந்த பிறகும் அந்த பேருந்தை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்ட பேருந்தை மீண்டும் இயக்க வேண்டுமென பொதுமக்கள் கோாிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தில்லையாடி பொதுநல சங்க முன்னாள் செயலாளர் கலியபெருமாள் கூறியதாவது: கொரோனா தாக்கத்தால் அரசு ஊரடங்கை அறிவித்து அனைத்து பேருந்துகளும் நிறுத்தப்பட்டது. அதன் பின்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனால் நாகையில் இருந்து தில்லையாடி வழியாக சிதம்பரம் சென்று வந்த பேருந்து நேற்று வரை இயக்கப்படவில்லை. இந்த பேருந்து இரவு நேரத்தில் சிதம்பரம் செல்வதற்கு வசதியாக இருந்தது. இந்த பேருந்து இயங்காததால் சிதம்பரம், கடலூர், சென்னை உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல 3 மைல் அப்பால் உள்ள திருக்கடையூருக்கு சென்று பஸ் ஏற வேண்டியுள்ளது. அதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பேருந்து மீண்டும் இயக்க வேண்டுமென அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் கலெக்டரிடம் பொதுமக்கள் சார்பில் பலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை. எனவே பொதுமக்கள் நலன்கருதி மயிலாடுதுறை கலெக்டர், அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மீண்டும் பேருந்தை இயக்க வேண்டும் என்றார்.

Tags : Nagai ,Chidambaram ,Thillaiyadi ,
× RELATED குடிசை வீடுகளில் தீ – பாஜகவினர் மீது வழக்கு பதிவு