பூம்புகார் தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பு செயல்விளக்கம்

தரங்கம்பாடி, மார்ச் 6: மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் எப்படி வாக்களிப்பது என்பது குறித்து செயல்விளக்க முகாம் நடந்தது. அதன்படி செம்பனார்கோவிலில் தரங்கம்பாடி தாசில்தார் இளங்கோவன் வாக்குப்பதிவு இயந்திரத்தில் எப்படி வாக்கு அளிப்பது என்ற செயல்விளக்கத்தை துவக்கி வைத்தார். இதேபோல் தரங்கம்பாடி தாலுகா அலுவலகம், திருக்கடையூர், செம்பனார்கோவில், பெரம்பூர், பாலையூர், தத்தம்குடி, குத்தாலம் தாலுகா அலுவலகம், குத்தாலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு எப்படி வாக்களிப்பது என்று செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இந்த செயல்விளக்கத்தை வருவாய்த்துறையினர் அளித்தனர். இதில் திரளான பொதுமக்கள் பங்கேற்று வாக்குப்பதிவு இயந்திரத்தில் எப்படி வாக்களிப்பது என்று தெரிந்து கொண்டனர்.

Related Stories:

More
>