தாந்தோணிமலை அருகே பொக்லைன் இயந்திரத்தை கடத்த முயன்ற வாலிபர் கைது

கரூர், மார்ச். 6: கரூர் தாந்தோணிமலை அருகே நிறுத்தியிருந்த பொக்லைன் இயந்திரத்தை திருட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம் மோகனூரைச் சேர்ந்தவர் செந்தில்ராஜா(30). இவர், தாந்தோணிமலை காவல் நிலையத்தில் அளித்த புகாரில், கரூர் தாந்தோணிமலை முத்துலாடம்பட்டி அருகே நிறுத்தியிருந்த தனது பொக்லைன் இயந்திரத்தை கரூர் தரகம்பட்டியை சேர்ந்த குமார் என்பவர் திருட முயன்றதாக தெரிவித்திருந்தார்.இந்த புகாரின் அடிப்படையில் தாந்தோணிமலை போலீசார் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>