×

சாத்தூரில் கொடி அணிவகுப்பு

சாத்தூர், மார்ச் 6: சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் 351 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 29 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சாத்தூரில் நேற்று கொடி அணிவகுப்பு ஊர்வலம் டிஎஸ்பி ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் 30 துணை ராணுவத்தினர், 6 இன்ஸ்பெக்டர்கள், 10 எஸ்ஐக்கள், 17 கூடுதல் எஸ்ஐக்கள், பெண் போலீசார் உள்ளிட்ட 230 பேர் பங்கேற்றுள்ளனர். சாத்தூர், மதுரை சாலையில் உள்ள டிஎஸ்பி அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் மதுரை பஸ்நிறுத்தம், சாத்தூர் பஸ்நிலையம், முக்குராந்தல், வடக்கு ரத வீதி, தேசிய நெடுஞ்சாலை வழியே மீண்டும் டிஎஸ்பி அலுவலகம் சென்றடைந்தது.

Tags : Sattur ,
× RELATED தொழில் போட்டியில் தொழிலாளியை வெட்டி கொன்றவருக்கு ஆயுள் சிறை