×

அருப்புக்கோட்டை அரசு கல்லூரி மாணவர்களிடம் முதல்வரின் வசூல் வேட்டை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்

விருதுநகர், மார்ச் 6: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியர் மனு அளித்தனர். பின்பு அவர் கூறுகையில், ``அருப்புக்கோட்டை - தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் அரசு கலை அறிவியல் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் இளங்கலை தமிழ், ஆங்கிலம், கணிதம், வணிகவியல் ஆகிய 4 துறைகள் உள்ளன. இவற்றில் மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். 2020-21ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை இணைய வழியில் நடைபெறுகிறது.

மாற்றுத்திறனாளிகள், பார்வையிழந்தோர், ஏழை மாணவர்கள் என பாராது அனைவரிடம் அரசு நிர்ணயித்த கல்லூரி கட்டணம் ரூ.2 ஆயிரத்திற்குள் இருக்கும் நிலையில் கல்லூரி முதல்வர் அன்பழகன், அதிகமாக ரூ.15 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கிறார். வாங்கும் கட்டணக்கொள்ளைக்கு ரசீது தருவதில்லை. இஷ்டத்திற்கு கட்டணம் வசூலிக்கும் நிலையில் மாணவ, மாணவியரிடையே சாதி பற்றிய வினாக்களை எழுப்பி மன உளைச்சலுக்கு உள்ளாக்குகிறார். எனவே, அவர் வசூலித்த கூடுதல் கட்டணத்தை திருப்பி தர வேண்டும்.

அரசு நிர்ணயம் செய்த தொகையை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதுடன், சாதி பற்றி பேசி வரும் முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர். இதுகுறித்து கல்லூரி முதல்வர் அன்பழகன் கூறுகையில்,`` கல்லூரியில் பணியாற்றும் மூன்று ஆசிரியர்கள் தூண்டுதலின் பேரில் மாணவர்கள், இல்லாத பொய்புகாரை தெரிவித்துள்ளனர். அரசு நிர்ணயித்த கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படவில்லை’’ என்று தெரிவித்தார்.

Tags : Aruppukottai Government College ,Collector's Office of the Chief Minister ,
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு