கழுகுமலை, வைகுண்டம் பகுதியில் இன்று மின்தடை

கோவில்பட்டி, மார்ச் 6:  கோவில்பட்டி மின்விநியோக செயற்பொறியாளர் சகர்பான் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கழுகுமலை உபமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான கழுகுமலை, குமாரபுரம், கரடிகுளம், வேலாயுதபுரம், சி.ஆர்.காலனி, வெள்ளப்பனேரி மற்றும் குருவிகுளம் பகுதிகளில் இன்று (6ம் தேதி) காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இதேபோல் விஜயாபுரி உபமின்நிலையத்திற்குட்பட்ட திட்டங்குளம், பாண்டவர்மங்கலம், ஈராச்சி, துறையூர், காமநாயக்கன்பட்டி, கசவன்குன்று ஆகிய பகுதிகளிலும், எம்.துரைசாமிபுரம் உபமின்நிலையத்திற்குட்பட்ட வானரமுட்டி, காலாங்கரைபட்டி, குமரெட்டியாபுரம், இடைசெவல், சத்திரப்பட்டி, வில்லிசேரி உள்ளிட்ட ப-குதிகளில் மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரையும், செட்டிகுறிச்சி மற்றும் சன்னதுபுதுக்குடி உபமின்நிலையத்திற்குட்பட்ட செட்டிகுறிச்சி, சிதம்பரம்பட்டி, வெள்ளாளன்கோட்டை, ராஜாபுதுக்குடி, டிஎன்.குளம், ஆத்திகுளம், தெற்குஇலந்தைகுளம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைகுண்டம்: வைகுண்டம் மின்வாரிய துறை உதவி செயற்பொறியாளர் சந்திரன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:

 வைகுண்டம் உபமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வைகுண்டம் உப மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறப்படும் ஸ்ரீவைகுண்டம், பேரூர், பேட்மாநகரம், சிவகளை, புதுக்குடி, ஆழ்வார்திருநகரி, ஆழ்வார்தோப்பு, பத்மநாபமங்களம், தோழப்பன்பண்ணை, அணியாபரநல்லூர், மீனாட்சிபட்டி, பொன்னன்குறிச்சி, வெள்ளூர், கால்வாய், புதுக்குளம், வல்லகுளம், தெற்குகாரசேரி, சேரகுளம், ராமானுஜம்புதூர், விட்டிலாபுரம், அனவரதநல்லூர், முத்தாலங்குறிச்சி, தாதன்குளம், சிவந்திபட்டி, கருங்குளம், மணக்கரை, கொங்கராயகுறிச்சி, ஆறாம்பண்ணை, ஆழ்வார்கற்குளம் ஆகிய பகுதிகளுக்கு இன்று  காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories:

>