அதிமுக வேட்பாளராக சண்முகநாதன் அறிவிப்பு வைகுண்டத்தில் அதிமுகவினர் கொண்டாட்டம்

வைகுண்டம் மார்ச் 6 : வைகுண்டம் தொகுதி அதிமுக வேட்பாளராக எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து வைகுண்டம் ஒன்றிய செயலாளர் காசிராஜன் தலைமையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.  இந்நிகழ்ச்சிகளில்,  ஆழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ராஜ்நாராயணன், மாவட்ட அவைத் தலைவர் திருப்பாற்கடல், மாவட்ட விவசாய அணி துணை செயலாளர் சொர்ணபாண்டியன், நகர செயலாளர் காசிராஜன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் கருப்பசாமி, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் ரமேஷ், பத்மநாபமங்கலம் ஊராட்சி செயலாளர் சுப்பையா பாண்டியன், முன்னாள் நகர செயலாளர் சண்முகசுந்தரம், இளைஞர் இளம்பெண்கள் பாசறை ஒன்றிய பொருளாளர் பொன்ராஜ், வார்டு செயலாளர் இருளப்பன், ஒன்றிய எம்ஜிஆர் மன்ற தலைவர் மோகன், ராஜ் கோலப்பன், நகர பெருளாளர் ஆப்பிள் ராமசாமி, ஒன்றிய இளைஞரணி செயலாளர் பேரூர் சிங்கப்பன், திருப்புளியங்குடி மாரியப்பன், கருங்குளம் இளைஞர்ணி செயலாளர் முருகையாபாண்டியன், எம்ஜிஆர் மன்ற தலைவர் பலவேசம், தக்கார் சுப்பையா, ஒன்றிய கவுன்சிலர் வாசிங் நடராஜன், பத்மநாபமங்கலம் குமார், ஆதிச்சநல்லூர் பொன்னுதுரை, மாரியப்பன். பழக்கடைதுரை, பாஜ வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் முத்துராமலிங்கம், மாவட்ட செயலாளர் சங்கர், ஒன்றிய தலைவர் சாமிநாதன், பாமக ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட துணைச் செயலாளர் பழனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>