×

திருப்புத்தூர் அருகே ஜல்லிக்கற்கள் கடத்திய லாரி பறிமுதல்

திருப்புத்தூர், ஜூன் 6: திருப்புத்தூர் அருகே தஞ்சாவூர்- மானாமதுரை தேசிய நெடுஞ்சாலை செண்பகம்பேட்டை பகுதியில் திருப்புத்தூர் வட்டாட்சியர் மாணிக்கவாசகம், மண்டல துணை வட்டாட்சியர் சசிகுமார் உள்ளிட்ட வருவாய் தறை அலுவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதிகாரிகளை கண்டவுடன் வண்டியை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். பின்னர் அதிகாரிகள் சோதனையில் வண்டியில் வாகன எண் இல்லாததும், அனுமதியின்றியும் திருமயத்தில் இருந்து மதுரைக்கு திருட்டுத்தனமாக ஜல்லிக்கற்கள் கடத்தி வந்ததும் தெரிய வந்தது. பின்னர் வாகனம் கைப்பற்றப்பட்டு, கீழசீவல்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

 

Tags : Lorry ,Tiruputhur ,Taluka Magistrate ,Manickavasagam ,Zonal ,Deputy ,Sasikumar ,Chenbagampettai ,Thanjavur-Manamadurai National Highway ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...