×

திருச்செந்தூர் கோவில் முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க 6 பேர் கொண்ட குழு அமைப்பு

 

சென்னை: திருச்செந்தூர் கோவில் முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க 6 பேர் கொண்ட குழு அமைத்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில், நடைமுறையில் உள்ள அன்னதான திட்டம் மற்றும் அன்னதானத்திட்டத்துடன் தொடர்புடைய அனைத்து பணிகள் மற்றும் திருக்கோயிலுக்கு சொந்தமான பக்தர்கள் தங்கும் விடுதி அறை முன்பதிவு ஆகிய செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்திட கீழ்காணும் துறை அலுவலர்களை கொண்ட ஆய்வுக்குழுவினை அமைத்து உத்தரவிடப்படுகிறது.

இந்தக் குழுவில், கோ.ஜெயப்பிரியா, தங்கம், பாஸ்கரன், கார்த்திகேயன், பகவதி, மாயக்கண்ணன் உள்ளிட்ட ஆறு பேர் இடம்பெற்றுள்ளனர். ஆய்வுக்குழுவிற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கிடவும், தேவையான வசதிகளை ஏற்படுத்தி தரவும் திருக்கோயில் இணை ஆணையர் / செயல் அலுவலருக்கு உத்தரவிடப்படுகிறது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பார்வைக்குறிப்பு ஆய்வறிக்கையின்படி ஆய்வுக்குழு ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க உத்தரவிடப்படுகிறது. ஆய்வுக்குழுவானது வரும் 20ம் தேதிக்குள் ஆய்வறிக்கையினை சமர்ப்பித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Tags : Tricendoor ,Chennai ,Hindu Religious Institute ,Minister ,Ramesh ,Subramaniaswamy Temple ,Thiruchendur ,Ananana ,
× RELATED போர் நிறுத்தத்திற்கு தயார்: புதினுக்கு உக்ரைன் அதிபர் கடிதம்