வாஷிங்டன்: பிரதமர் மோடி நல்ல நண்பர் என்றும் இந்தியாவும், அமெரிக்காவும் விரைவில் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை எட்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் என தெரிவித்தார். கட்டாய உழைப்பு தொடர்பான விதிகளை முறையாக கடைபிடிக்க தவறியதால் இந்தியாவுக்கு 12.5 சதவீதம் கூடுதல் இறக்குமதி வரியை விதிக்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இது அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஏற்றுமதியில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். இந்தியா தவிர மேலும் 53 நாடுகளுக்கும் கூடுதல் வரியை விதிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதால் உலக பொருளாதாரத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் அதிபர் டிரம்ப் கூறியதாவது: பல ஆண்டுகளாக, அமெரிக்காவை இந்தியா சுரண்டி வந்தது. அவர்கள், எங்கள் மீது பெரும் வரிகளை விதித்துவிட்டு, எதையும் செலுத்தவில்லை. இப்போது நிலைமை தலைகீழாக மாறி, நாங்கள் இந்தியாவுடன் இணைந்து நிறைய பணம் சம்பாதிக்கிறோம். ஆனால் இந்தியாவும், அமெரிக்காவும் விரைவில் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை எட்டும், ஏனென்றால் பிரதமர் மோடியை எனக்கு மிகவும் பிடிக்கும்; அவர் எனது நல்ல நண்பர், நாங்கள் நன்றாக பழகுகிறோம். எங்களுக்குள் ஒரு நல்ல உறவு இருக்கிறது.
ஈரானிடம் கடற்படையும் இல்லை, விமானப்படையும் இல்லை, நாங்கள் அவர்களின் தலைமையை அழித்து விட்டோம். பிறகு, அவர்கள் போரில் மிகவும் சிறப்பாக செயல்படுவதாக போலிச் செய்திகளில் படிக்கிறீர்கள். இது நம்ப முடியாதது. அவர்களிடம் 159 கப்பல்கள் உள்ளன. அவை அனைத்தும் கடலின் அடியில் கிடக்கின்றன. நாங்கள் அங்கு அவற்றை புகைப்படம் எடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
