×

வீடுகளை அகற்ற எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

துரைப்பாக்கம்: சென்னை மாநகராட்சி 15வது மண்டலம் 196வது வார்டுக்கு உட்பட்ட ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் பகுதியில் கடந்த 25 வருடங்களாக சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் உள்ள வீடுகளை அகற்ற ேநற்று வருவாய்த்துறையினர் நோட்டீஸ் வழங்கி வருவதாக தகவல் பரவியது. இதையடுத்து, அப்பகுதியை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்றாக திரண்டு, ஈஞ்சம்பாக்கம் – திருவள்ளுவர் சாலை 2வது பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது. தகவலறிந்த நீலாங்கரை போலீஸ் உதவி கமிஷனர் சுதர்சன், இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் சோழிங்கநல்லூர் துணை வட்டாட்சியர் பரிமேலழகன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது….

The post வீடுகளை அகற்ற எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Durai Pakkam ,Enchambakkam Bethel Nagar ,Chennai Corporation ,15 Zone 196 Ward ,
× RELATED பூத் ஏஜென்டாக பணியாற்றியதற்கு பணம்...