×

சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,15,440க்கு விற்பனை!!

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,15,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவி வரும் அரசியல் மாற்றங்கள், எப்போதும் தங்கம் விலையில் எதிரொலிப்பது வழக்கம். அந்த வகையில், அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்படப் போவதாக வெளியாகியுள்ள தகவல்கள், உலகப் பொருளாதாரத்தை புதிய பாதையில் தள்ளியுள்ளது. இதனால் தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.

அதாவது நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.1,15,840க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.14,480க்கு விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.285க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதனையடுத்து இன்று சென்னையில் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,15,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.14,430க்கு விற்பனையாகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.280க்கும், ஒரு கிலோ ரூ.2,80,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Chennai ,United States ,Iran ,
× RELATED வெளிநாட்டில் இருந்து ஐதராபாத்துக்கு...