பட்டிவீரன்பட்டி பகுதியில் பஸ் படிக்கட்டில் ஆபத்தான பயணம் கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை

பட்டிவீரன்பட்டி, மார்ச் 6: பட்டிவீரன்பட்டி அருகே சித்தரேவு, நெல்லூர், கதிர்நாயக்கன்பட்டி, கணேசபுரம், அய்யம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் பட்டிவீரன்பட்டி, வத்தலக்குண்டு போன்ற ஊர்களில் உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர். தற்போது அரசு உத்தரவின்படி 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் பட்டிவீரன்பட்டி, வத்தலக்குண்டுவில் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் காலையில் பள்ளிக்கு செல்லும் போதும், பள்ளி முடிந்து மாலையில் வீடு திரும்பும் போதும் பஸ்களின் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்து வருகின்றனர்.

Related Stories:

>