×

ஒரு வங்கி கணக்கில் இருந்து பல கணக்கிற்கு பணம் போகுதா? உடனே புகார் கொடுங்க

திண்டுக்கல், மார்ச் 6: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் வங்கி அதிகாரிகள், வருமான வரித்துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்ததாவது: வங்கிகளில் தனிநபரின் கணக்கில் இருந்து சந்தேகத்திற்கு இடமாக பணம் பரிவர்த்தனை குறித்து தினசரி அறிக்கையினை கலெக்டரின் நேர்முக உதவியாளர் கணக்கு பிரிவுக்கு சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்க வேண்டும் சந்தேகத்திற்கு இடமான பணவரவு குறித்தும் தகவல் அளிக்க வேண்டும். ரூ.1 லட்சத்திற்கும் மேல் கூடுதலாக பணம் எடுப்பவர்களின் தகவல்களை அளிக்க வேண்டும். ஏடிஎம் இயந்திரங்களில் பணம் வைக்க வாகனங்களில் கொண்டு செல்லும் போது, அந்த தொகைக்குரிய சரியான விபரங்கள் வங்கிகள் அளிக்க வேண்டும். அதனை கொண்டு செல்லும் முகவர்களின் முழு தகவல்கள் மற்றும் வாகனங்களின் எண்கள் குறித்த விபரங்களை தேர்தல் அலுவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

ஒரு கணக்கில் இருந்து பல நபர்களின் வங்கி கணக்குக்கு பணம் மாற்றுதல் உள்ளிட்ட பண பரிமாற்றங்களை கண்காணித்து அறிக்கையளிக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி ரூ.10 லட்சத்திற்கு மேற்பட்ட பண பரிவர்த்தனையை வருமானவரித்துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். ரூ.10 லட்சத்திற்கு மேற்பட்ட பண பரிவர்த்தனை குறித்த புகார்கள் வந்தால் வருமான வரித்துறையினர் உடனே ஆய்வு வேண்டும். அச்சக உரிமையாளர்கள் தேர்தல் தொடர்பான சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள், விளம்பரங்களை அச்சிட்டு பிரசுரம் செய்யும் போது, அதில் உரிமையாளர்கள், பதிப்பகத்தார் பெயர், முகவரி ஆகியவை முன்பக்கத்தில் அச்சடிக்கப்பட வேண்டும். மேலும் அச்சிடுவதற்கு முன்பு அதில் இடம்பெறும் வாசகங்களை தேர்தல் அலுவலரிடம் காண்பித்து முறையான அனுமதி பெற்ற பின்னரே அச்சடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags :
× RELATED கணிதத்துறை கருத்தரங்கம்