×

குமரி மாவட்டத்தில் மது விற்பனையை கண்காணிக்க பறக்கும்படையில் குழு

நாகர்கோவில், மார்ச் 5:  குமரி மாவட்டத்தில் மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலையொட்டி மதுபான விற்பனையை கண்காணிக்க பறக்கும்படையில் குழு அமைத்து கலெக்டர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார். குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தேர்தல் மற்றும் கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக குமரி மாவட்டத்தில் மதுபான விற்பனை மற்றும் சட்டவிரோத மதுபான விற்பனை, கடத்தல், பதுக்கல் போன்றவற்றை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட அளவில் அமைக்கப்பட்ட பறக்கும்படை குழுவில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குமரி மாவட்ட டாஸ்மாக் உதவி மேலாளர் (கணக்கு) என்.நந்தகுமார் 8072469117, டாஸ்மாக் இளநிலை உதவியாளர் ஜெயசேகரன் 9486387977, இளநிலை உதவியாளர்  முருகேஷ் 6383880316, இளநிலை உதவியாளர் வேலப்பன் 9384932176 நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அலுவலர்களிடம் மதுபானங்கள் குறித்த அனைத்து புகார்களையும் தெரிவிக்கலாம். மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 1950க்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Flying Squadron ,Kumari district ,
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள்...