×

நாகர்கோவிலில் குமரி - திருவனந்தபுரம் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை

நாகர்கோவில், மார்ச் 5: தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் அறிவிப்பை கடந்த 26ம்தேதி, தேர்தல் ஆணையம் அறிவித்தது.  தமிழகத்தில் தேர்தல் நடக்கும் அதே நாளில் கேரள மாநிலத்திலும் சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. குமரி மாவட்டம் கேரள மாநில எல்லையில் உள்ளதால், கேரள, குமரி எல்லைகளில் தேர்தல் தொடர்பாக பணம் கைமாறுதல் மற்றும் சட்ட ஒழுங்கு பிரசனை நடக்காமல் இருக்க திருவனந்தபுரம், குமரி மாவட்ட போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நேற்று  நாகர்கோவில் வடசேரியில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்தது. குமரி மாவட்ட காவல்துறை சார்பில் ஏடிஎஸ்பி ஈஸ்வரன் தலைமை வகித்தார். திருவனந்தபுரம் மாவட்டம் சார்பில் எஸ்பி பி.கே.மது தலைமை வகித்தார். மேலும்  டிஎஸ்பி அனில்குமார், குமரி மாவட்ட ஏடிஎஸ்பி மணிமாறன், டிஎஸ்பிக்கள் பீட்டர் பால், ராமசந்திரன் மற்றும் குமரி எல்லையான கொல்லங்கோடு, நித்திரவிளை, களியக்காவிளை, அருமனை, களியல் உள்ளிட்ட போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்களும், அதுபோல் திருவனந்தபுரம் எல்லையில் உள்ள போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்களும் கலந்துகொண்டனர். கூட்டத்தில் எல்லையில் உள்ள போலீசார் ஒருங்கிணைந்து பணியாற்றுவது என முடிவு செய்யப்பட்டது.

Tags : Nagercoil ,Kumari ,Thiruvananthapuram ,District Police ,
× RELATED அரசியல் கட்சிகள் பணம் கொண்டு வருவதை...