நகராட்சி ஆணையர் தகவல் செலவின கண்காணிப்பு தொடர்பாக வங்கி மேலாளர்களுடன் தேர்தல் அலுவலர் ஆலோசனை

பெரம்பலூர், மார்ச் 5: பெரம்பலூர் மாவட்ட கலெ க்டர் அலுவலகக் கூட்ட அரங்கில், சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டுத் தேர்தல் செலவின கண்காணிப்பு தொடர்பாக வங்கி மேலாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. வரு மானவரித்துறை உதவி ஆ ணையர் (சென்னை) அசோக்குமார் முன்னிலை வகித் தார். கூட்டத்தில் மாவட்டத் தேர்தல் அலுவலரும் கலெக்டருமான  வெங்கட பிரியா தலைமையில் வகித்துப் பேசியதாவது :

வங்கிகளில் இருந்து பணத்தை எடுத்துச் செல்லும் வேன்களில் வங்கியின் தொகைத் தவிர ஏனைய யாதொரு மூன்றாம் தரப்பு முகவரமைப்புகள், நிறுவன ங்களின் தொகையைக் கொண்டுச் செல்லவில்லை என்பதை வங்கி உறுதி செய்யவேண்டும். சந்தேகத்திற்கிடமான பண நட வடிக்கைகளைக் கண்கா ணித்தல் தொடர்பாக, தேர்தல் நடப்பதற்கு 2 மாதங்களுக்கு முன்பு, பணம் எடுப்பது அல்லது வைப்பது போன்ற நிகழ்வுகள் நடைபெறாதபோது தேர்தல் நடை முறையின் போது ஒரு வங்கிக் கணக்கில் ரூ.1லட்சத்திற்குமேல் அசாதாரணமா ன மற்றும் சந்தேகத்திற்குரிய முறையில் பணம் எடுப்பது அல்லது வைப்பது.

வேட்பாளர்கள் அல்லது அவரது வாழ்க்கைத் துணைவர் அல்லது அவரை சார்ந் திருப்பவர்களின் வங்கிக் கணக்குகளிலிருந்து ரூ.1 லட்சத்திற்கு மேல்வைப்பது அல்லது எடுப்பது. தேர்தல் நடைமுறையின்போது அரசியல்கட்சியின் கணக்கிலி ருந்து ரூ.1 லட்சத்திற்கு மேல் ஏதேனும் பணம் எடுப்பது அல்லது பணம் வை ப்பீடு செய்வது. வாக்காளர் களுக்கு லஞ்சம் கொடுப்பதற்காகப் பயன்படும் ஏனைய யாதொரு சந்தேகத்திற் கிடமான பண கொடுக்கல் வாங்கல்கள் ஆகிய நடவடி க்கைகளைக் கண்காணித்து தினசரி அறிக்கை அளிக்க வேண்டும் எனத் தெரி வித்தார்.கூட்டத்தில் பெரம்பலூர் வருமானவரித்துறை அதிகாரிகள் உமாமகேஸ்வரி, சுப்ரமணியன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) தர் மற்றும் வங்கி மேலாளர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>