×

ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல் சட்டமன்ற தேர்தல் எதிரொலி மதுபானம் கடத்தல், பதுக்கி விற்றால் செல்போனில் புகார் தெரிவிக்கலாம்

பெரம்பலூர், மார்ச் 5: தேர்தல் எதிரொலியால் பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமான மதுபான விற்பனை, கடத்தல் தொடர்பான புகார்களை செல்போன்கள் மூல ம் தெரிவிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் வெங்கடபிரியா தகவல் தெரிவித்துள்ளார்.தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் சட்ட விரோத மதுபான விற்பனையை தடுப்பதற்காகவும், மதுபா னக் கடைகளில் தினசரி விற்பனையை கண்காணிக்கவும், கள்ளச்சாராயம் மற் றும் மதுபானம் கடத்தல், பதுக்கல் மற்றும் சட்ட விரோதமான விற்பனை போன்ற மதுபானம் தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, இதுபோன்ற புகார்களை தெரிவிக்க பெரம்பலூர் டாஸ்மாக் உத வி மேலாளர் பாரதிவள வன்(சி.வி) என்பவரை 978 7507177 என்ற செல்போன் எண்ணிலும், பெரம்பலூர் டாஸ்மாக் உதவிமேலாளர் (கணக்குகள்) கார்த்தி என் பவரை 9123555728 என்ற செல்போன் எண்ணிலும், இளநிலை உதவியாளர்கள் உதயகுமார் என்பவரை 9894236840 என்ற செல்போ ன் எண்ணிலும், முத்துவே ல் என்பவரை 8344225319 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கலாம்.

மேலும் பொதுமக்கள் சட்டவிரோத மதுபான விற்பனை, மதுபான கடத்தல் தொடர்பான புகார்களை மாவட்ட கலெக்டர் அலுவலக தேர்தல் கட்டுப்பாட்டு அறையிலுள்ள அலுவலர்களுக்கு 1950 என்றக் கட்டணமில்லாத் தொலைப் பேசி எண்ணிற்கும் புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

தேர்தல் நடத்தும் அலுவலர் தகவல்
தேர்தல் விதிமீறல் குறித்து புதிய செயலி மூலம் புகார் தெரிவிக்கலாம்
ஜெயங்கொண்டம், மார்ச் 5: தேர்தல் விதிமீறல்கள் புதிய செயலி மூலம் புகார் தெரிவிக்கலாம் என்று ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் சிவராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.அரியலூர் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தலின்படி ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையம், காந்தி பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.100 சதவீதம் வாக்குப்பதிவை ஏற்படுத்தும் வகையிலும் கொரோனா கால தடுப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டு வாக்கு அளிக்கும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக கூடுதலாக ஒரு மணி நேரம் வாக்கு செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் பொதுமக்கள் மற்றும் வாக்காளர்கள் தேர்தல் விதி மீறல்கள் தொடர்பான புகார்களை அளிக்க 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டும், VIGIL என்ற செயலி(APP)யின் வாயிலாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். இதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நகராட்சி ஆணையர் (பொ) சிவராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Tags : Teachers' Union ,Assembly ,
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில்...