×

சீர்காழி அருகே பல்லவனேஸ்வரர் கோயில் குளத்தில் 3 நாள் தூய்மைப்பணி

சீர்காழி, ஜூன் 3: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வரலாற்று சிறப்பு மிக்க பல்லவனேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் திருக்குளம் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக பராமரிப்பின்றி குளத்தில் பிளாஸ்டிக் பைகள், குப்பைகள் மிதந்தது. இதனால் கோயி்ல் திருக்குளத்தை பயன்படுத்த முடியாமல் இருந்தது. இதனை அறிந்த பூம்புகார் பனை அறக்கட்டளை தாமாக முன்வந்து கோயில் குளத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

கடந்த 31ம் தேதி முதல் மூன்று நாட்கள் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வந்தது. கோவில் குளத்தில் இருந்து பிளாஸ்டிக் பைகள் மற்றும் உடைந்த பாட்டில் துகள்கள், காலி மது பாட்டில்கள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.இதற்கான ஏற்பாடுகளை அண்ணாமலை பல்கலைக்கழக தத்துவத்துறை உதவி பேராசிரியரும் பூம்புகார் பனை அறக்கட்டளை நிறுவனமான ரவீந்திரன் ஏற்பாடு செய்திருந்தார் கோயில் குளத்தை சீரமைத்த பனை அறக்கட்டளை நிறுவனர் ரவீந்திரன் மற்றும் நிர்வாகிகளுக்கு பக்தர்கள் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

 

 

Tags : Pallavaneswarar temple pond ,Sirkazhi ,Pallavaneswarar temple ,Mayiladuthurai district ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...