கருத்தரங்கில் ஆலோசனை தோகைமலையில் மதுபானம் பதுக்கி விற்ற 3 பேர் கைது

தோகைமலை, மார்ச் 5: தோகைமலையில் மதுபானங்களை பதுக்கி விற்பனை செய்த 3 பேரை தோகைமலை போலீசார் கைது செய்தனர். தோகைமலை காவல்சரகம் கல்லடை ஊராட்சி கல்லடை அண்ணாநகரை ேசர்ந்தவர் கணபதி (45). இதே பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் (55). இருவரும் தங்களின் பெட்டிக்கடையில் மதுபானங்களை அனுமதியின்றி பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தோகைமலை போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதேபோல் தோகைமலை அருகே உள்ள பாதிரிபட்டி பிரிவு ரோட்டில் விராலிமலை செல்லம்பட்டியை சேர்ந்த செந்தில் (42) என்பவர் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் தோகைமலை போலீசார் நேரில் சென்று ஆய்வு நடத்தியதில் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிந்தது. இதையடுத்து கணபதி, ராமலிங்கம், செந்தில் ஆகியோர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். மேலும் பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories:

>