குளித்தலையில் துணை ராணுவ படையினர் கொடி அணிவகுப்பு பேரணி

குளித்தலை, மார்ச் 5: குளித்தலையில் சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணி குறித்து துணை ராணு படையினர் கொடி அணிவகுப்பு பேரணி நடத்தினர்.தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையொட்டி தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்பு பணி மற்றும் செக்போஸ்ட்களில் வாகன சோதனை போன்ற பணிகளுக்காக மத்திய துணை ராணுவபடை கம்பெனி ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றனர். தேர்தல் ஆணையர் உத்தரவுப்படி கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதியில் காவல்துறை சார்பில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக தேர்தல் பாதுகாப்பினை உறுதிபடுத்தும் விதமாகவும், குளித்தலை நகரத்தில் பெரிய பாலத்தில் இருந்து சுங்ககேட் வரை துணை ராணுவ படை மற்றும் போலீசார் அமைதிப் பேரணி நேற்று நடைபெற்றது. இந்த பேரணியை கரூர் எஸ்பி மகேஸ்வரன் தொடங்கிவைத்து கலந்து கொண்டார். இப்பேரணி பெரிய பாலத்தில் தொடங்கி வைசியாள் தெரு, மாரியம்மன் கோவில் பஜனை மடம், கடைவீதி, பெரியாண்டவர் தெரு, அம்மன் கோவில் தெரு, காந்தி சிலை, பஸ் நிலையம், பயணியர் விடுதி, வட்டாட்சியர் அலுவலகம், நீதிமன்றம், காவல் நிலையம், கடம்பூர் கோவில் வழியாக சுங்க கேட்டை சென்றடைந்தது. இப்பேரணியில் குளித்தலை டிஎஸ்பி சசிதர், குளித்தலை காவல் ஆய்வாளர் உதயகுமார் மற்றும் அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், துணை ராணுவ படையினர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>