கும்பகோணத்திற்கு விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வருகை

கும்பகோணம், மார்ச் 5: காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரி சுவாமிகள் நேற்று முன்தினம் இரவு கும்பகோணம் வந்தார். கும்பகோணம் சக்கரைபடித்துறையில் சங்கரமடம் கைங்கர்ய சபா சார்பில் பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். அப்பகுதி உள்ள பொதுமக்கள் அவருக்கு பூரண கும்ப மரியாதை செய்தனர். நேற்று காலை 9 மணி முதல் சந்திரமவுலீஸ்வர சுவாமி பூஜை செய்தார். பக்தர்களின் பாத பூஜையை ஏற்று தீர்த்த பிரசாதம் வழங்கினார். 6ம் தேதி முதல் 14ம் தேதி வரை கலவை ஆச்சார்ய சுவாமிகளின் ஆராதனை விழாவும் 9ம் தேதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தி விழாவும் நடைபெறுகிறது. இதையொட்டி வேத கிரம பாராயண ஹோமங்கள் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை  சங்கரமட கைங்கர்ய சபா செய்து வருகிறது.

Related Stories: