×

30 அணிகள் பங்கேற்பு கோடைக்கு முன்பே வறண்டுபோன வடிகால்குளம் கரூர் மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்பனை தடுக்க கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்

கரூர், மார்ச் 5: கரூர் மாவட்டத்தில் முறைகேடாக மதுபாட்டில்கள் விற்பனை செய்வதை தடுக்க கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.சட்டமன்ற தேர்தல் அறிவிப்பினை தொடர்ந்து, கரூர் மாவட்டத்தில் சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையரின் உத்தரவின்படி கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.ராதாகிருஷ்ணன் (கூடுதல் காவல் கண்காணிப்பாளர்) மதுவிலக்கு மற்றும் அமலாக்கப்பிரிவு கரூர் (9496163363). ரவிச்சந்திரன் மாவட்ட மேலாளர் தமிழ்நாடு மாநில வாணிப்பழகம் கரூர் (9445029717). சந்தியா (மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் கரூர் (9445477835).

இவர்கள் கரூர் மாவட்ட எல்லைக்குள் அமைந்துள்ள பகுதிகளில் மதுபாட்டில்களில் முறையற்ற விற்பனை தினசரி விற்பனையை கண்காணித்தல், மொத்தமாக கொள்முதல் செய்வதை தடுத்தல், மதுபானம் தொடர்பாக பெறப்படும் புகார்கள் மீது நடவடிக்கை எடுத்தல், அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டும் மதுபானக்கடைகள் செயல்படுவதை கண்காணித்தல், அரசின் கொரோனா தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுதல் ஆகியவை தொடர்பான நடவடிக்கைகளை கண்காணிப்பாளர்கள்.

எனவே, தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணாக மதுபானங்கள் கடத்தல் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு 18004252507, 04324-255451, 255452, 255453 என்ற எண்களிலும் மற்றும் அதிகாரிகளின் தொலைபேசி எண்களுக்கும் தெரிவிக்கலாம். இவ்வாறு மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags : Vadikalkulam Karur ,
× RELATED குளித்தலையில் மாணவரை ஆயுதங்களால் தாக்கிய வாலிபர் கைது