×

பிரான்ஸிடமிருந்து 114 ரஃபேல் போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம்.! அதிகாரப்பூர்வ நடவடிக்கையை தொடங்கிய இந்தியா

டெல்லி: பிரான்ஸிடமிருந்து 114 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான நடவடிக்கையை இந்தியா தொடங்கி உள்ளது. ஒப்பந்தபடி இதில் 90 விமானங்களை இந்தியாவிலேயே தயாரிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.பிரான்ஸிடம் இருந்து 114 ரஃபேல் போர் விமானங்களை (Rafale Fighter Jets) வாங்குவதற்கான அதிகாரப்பூர்வ நடவடிக்கையை தொடங்கியுள்ள நிலையில், இதற்கான கோரிக்கை கடிதத்தை ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகம் பிரெஞ்சு அரசிற்கு அனுப்பியுள்ளது. இந்திய விமானப்படையின்MRFA திட்டத்தின் கீழ், சுமார் ரூ.3.25 லட்சம் கோடி ($39 – 40 பில்லியன்) மதிப்பில் இந்த மெகா ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த ஒப்பந்தம் தொடர்பாக ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகத்தின் கொள்முதல் பிரிவு கடந்த வாரம் பிரான்ஸ் அதிகாரிகளுக்கு கோரிக்கை கடிதத்தை அனுப்பினர். இந்த ஒப்பந்தத்தின் கீழ், 94 ரஃபேல் போர் விமானங்கள், பிரான்ஸ் தயாரிப்பு நிறுவனமான ‘டசால்ட் ஏவியேஷன்’ (Dassault Aviation) ஒரு இந்திய நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் வைத்துத் தயாரிக்க உள்ளது.

இதனிடையே இந்தியாவின் இந்த கோரிக்கை கடிதத்திற்கு பிரான்ஸ் அரசு அடுத்த 2 முதல் 3 மாதங்களுக்குள் பதிலளிக்கும் என்றும், இரு தரப்பினரும் அடுத்த ஓராண்டுக்குள் பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்து ஒப்பந்தத்தை இறுதி செய்வார்கள் என்றும் அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்து உள்ளன. இந்திய விமானப்படை மற்றும் இந்திய கடற்படை ஏற்கனவே 62 ரஃபேல் விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்துள்ள நிலையில், 114 ரஃபேல் ஆர்டரையும் கணக்கில் சேர்த்தால் இந்த எண்ணிக்கை 176-ஆக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : FRANCE ,India ,Delhi ,
× RELATED மே மாதத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு...